உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை சட்டங்களிற்கு ஏற்ற விதத்தில் காணப்படவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபையின் சிரேஸ்ட இயக்குநர் டெப்புரோஸ் முச்சேனா தலைமையிலான சர்வதேச மன்னிப்புச்சபையின் குழுவொன்று மார்ச் மாதம் 27 ம் திகதி முதல் இரண்டாம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் இணைந்து ஆதரவாக உள்ளோம் என டெப்புரோஸ் முச்சேன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக நான் இவர்களில் பலரை சந்தித்து அவர்களின் கரிசனையை செவிமடுத்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ந்தும் அமைதியாக ஒன்றுகூடுதல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை பாதுகாப்பதற்கும் உறுதிசெய்வதற்கும் சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ந்தும் பணியாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தத்தின் சூழமைவிலும் அதன் பின்னரும் மனிதஉரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலவந்தமாக காணாமல்போதல் குறித்து பணியாற்றும் அமைப்புகள் ஆகிய தரப்பின் நீதி உண்மை மற்றும் இழப்பீட்டிற்கான நீண்டகால வேண்டுகோள்களை செவிமடுப்பதற்காக அரசாங்கம் அவர்களுடன் அவசரமாகவும் நேர்மையாகவும் ஈடுபாட்டை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச குறிப்பாக வடக்குகிழக்கை சேர்ந்த காணாமல்போனவர்களின் தாய்மார்களிற்கும் இலங்கையின் உறுதி மிக்க சிவில் சமூகத்தினருக்கும் அரகலய ஆர்ப்பாட்டக்குழுவிற்கும் மீனவ சமுதாயத்திற்கும் அவர்களின் பெறுமதியான நேரத்தை செலவிட்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறியமைக்காக நன்றி தெரிவிப்பதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.