ஜனநாயகத்தை பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றுதிரள வேண்டும்

87 0

அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாடுகளினால் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமை கேலிக்கூத்தாக கப்பட்டுள்ளது.ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டிலுள்ள சுயாதீன் ஆணைக்குழுக்கள் சுயாதீனத்தன்மையை இழந்துள்ளது. இதனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரமம் ஓங்கியுள்ளது என்பதை நாட்டுமக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை முற்றுமுழுதாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தினால் வலுவிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை நீதிமன்றத்தில் வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் அமைச்சின் செயலாளரால் நிதி விடுவிக்கப்படவில்லை.

இது தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவை புறந்தள்ளி அரசாங்கத்தின் நிபந்தனைக்கு ஏற்ப செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் உயர்நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதன் ஊடாக அவர் தண்டிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கிறது.

இருப்பினும் குறித்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியின் கட்சிகளும் தோல்வியடையும் என்பதை அறிந்து தேர்தலை பிற்போடுவதற்கான சதித்திட்டங்களை மேற்கொள்ளப்படுகின்றது.

குறிப்பாக நாடு பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டெழுந்த பின் தேர்தலை நடத்துவோம் என்கின்றனர். இதுவேடிக்கையான தர்க்கமாக இருக்கிறது.

1977 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார நெருக்கடி கடுமையாக இருந்தபோதிலும் பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது. அன்று தேர்தலொன்றுக்கு முகம் கொண்டுக்க முடியமாக இருந்தால் ஏன் தற்போது தேர்தலை நடத்த முடியாமல் இருக்கிறது.

தேர்தல் ஏன் ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை மக்களுக்கு இலகுவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். இதேவேளை இன்று அரசாங்கத்தினால் ஜனநாயகமும் மக்களின் வாக்குரிமையும் கேலிக்கூத்தாக்கப்படுகின்றது.

எதுஎவ்வாறிருப்பிபனும் நிச்சயமாக நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாகும்.

இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிக்கட்சிகளும் சிவில் அமைப்புகளும் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவதில் பின் நிற்கின்றோம்.

இதன் காராணமாகத்தான் அரசாங்கம் பலமாக இருக்கிறது. எனவே நாம் ஒன்றுபட்டு செயற்படுவோமானால் தேர்தலை

வெற்றிகொள்ள முடியும். நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியும். எனவே அனைத்து தரப்பினரும் ஒன்றுதிரள வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கள் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் ஜனநாயகத்தை பாதுகாக்க சரியான தீர்மானங்களை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.