காங்கேசன்துறை – காரைக்கால் இடையேயான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரலில்

162 0

காங்கேசன்துறை முதல் காரைக்கால் துறைமுகம் வரையான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி திட்டமிட்டபடி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான முனைய கட்டம் அமைக்கும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது என்று Indsri Ferry Service Pvt Ltd இன் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்தார்.

இலங்கை கடற்படை தற்போது சுங்க மற்றும் குடிவரவு கட்டிடங்கள், பயணிகளுக்கான புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆரம்பத்தில், படகுகள் வாரத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு பயணத்திற்கு 120 பயணிகளை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் படகுச் சேவை இடம்பெறாது எனவும் இந்தப் படகுப் பயணமானது 4 மணித்தியால பயண நேரம் என்பதுடன் பயணி ஒருவர் 100 kg பொதி வரை கொண்டு செல்ல முடியுமென்றும் இதற்கான ஒருவழிக்கட்டணமாக – 50 அமெரிக்க டொலர் அறவிடப்படம் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.