திவுலப்பிட்டி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, தடை செய்யப்பட்ட விவசாய இரசாயனங்களுடன் 2 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பூச்சி கட்டுப்பாட்டு பதிவாளரின் அனுமதியின்றி லொறியில் விவசாய இரசாயன பொருட்களை ஏற்றிச் சென்றபோது இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பல்வேறு எடை கொண்ட பல்வேறு வகையான விவசாய இரசாயனங்கள் அடங்கிய சுமார் 1,950 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி சுமார் 1,672,500 ரூபாய் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திவுலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.