ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து சிரேஸ்ட உறுப்பினர்கள் இணைந்துகொள்ளலாம் என தகவல்கள் வெளியாகின்றன.
பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன இறுதிமுடிவு எட்டப்படுவதற்கு சில காலம் எடுக்கலாம் என இந்த விடயம் குறித்து நன்கறிந்த ஒருவர் தெரிவித்தார்.
தன்னை பற்றிய விபரங்கள் வெளியானால் இந்த முயற்சிகள் பாதிக்கப்படலாம் என்பதால் தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்த விரும்பவில்லை.
இந்த விடயத்தில் தொடர்புபட்டவர்களின் பெயர் விபரங்களும் வெளியாகக்கூடாது என அவர் தெரிவித்தார்.பெயர் விபரங்கள் வெளியானால் இந்த முயற்சிகள் தோல்வியடையலாம் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்துடன் இணையவிரும்புபவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ள அந்த நபர் அவர்கள் ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை குறித்து மாத்திரமே கரிசனை கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.