வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை காட்டுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (1) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கிரான் பாடசாலை வீதியைச் சேர்ந்த 69 வயதுடைய பசுபதி ராகவன் என்பவர் ஆவார்.
இந்நிலையில் உயிரிழந்த நபர் கடந்த புதன்கிழமை (29) குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டை விட்டு வெளியேறியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.