800 சாரதிகள், 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள இ.போ.ச. நடவடிக்கை!

159 0

800 சாரதிகள் மற்றும் 275 நடத்துநர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்கான ஆட்சேர்ப்பு விரைவில் மேற்கொள்ளப்படும் என இ.போ.ச தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் 1,035 சாரதி வெற்றிடங்கள் மற்றும் 450 நடத்துநர் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஆட்சேர்ப்பு மூலம் இந்த வெற்றிடங்களின் எண்ணிக்கை குறையும் என இ.போ.ச தலைவர் தெரிவித்துள்ளார்.