ஊவா குடா ஓயா, வெஹரய பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊவா குடா ஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வெஹரய பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான திருமணமானவர் ஆவார்.
வெஹரய பிரதேசத்தில் உள்ள வாடி ஒன்றில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை சிறு காயங்களுக்குள்ளாகி அதிர்ச்சியடைந்த மற்றொருவர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.