யேர்மனியில் பிரித்தானியா மன்னர் மூன்றாம் சார்லஸ் பாலாடைக் கட்டிகளைத் (சீஸ்) தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று யேர்மனியில் உள்ள ஒரு ஆர்கானிக் பண்ணைக்குச் சென்றார். அங்கு அவர் ஒரு சிறப்பு பாலாடைக் கட்டியைத் தயாரிக்க உதவினார்.
பல ஆண்டுகளாக சூழலியல் மற்றும் பசுமை வேளாண்மையில் ஆர்வமுள்ள மன்னர், யேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் மற்றும் பிராண்டன்பர்க் மாநில முதலமைச்சர் டீட்மார் வோய்ட்கே ஆகியோருடன் குறித்த பண்ணைக்கு பயணம் செய்திருந்தார்.
அவரது வருகையின் போது, அவருக்கு கிரீடம் வடிவிலான கேக் ஒன்றும் வழங்கப்பட்டது.
மன்னர் தனது ஆட்சியின் முதல் வெளிநாட்டு பயணத்திற்காக தனது இராணி கமிலாவுடன் மூன்று நாள் சுற்றுப்பயணத்திற்காக யேர்மனிக்கு சென்றார்.