களனி கங்கையில் மூழ்கிய மூவரில் ஓர் இளைஞரின் சடலம் மீட்பு!

154 0

களனி கங்கையின் நவகமுவ மாபிடிகம, பாலத்துக்கு அருகில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூன்று இளைஞர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில்  அவர்களில் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கடுவெல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் நால்வர நேற்று (31) ஆற்றில் நீராடச் சென்றபோது, அவர்களில் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு மேலும் இருவர் அவரைக் காப்பாற்றச் சென்றபோது அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையிலேயே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கண்டி ஹபரகல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜனித் மகேந்திரா என்பவரே உயிரிழந்துள்ளார். நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்