தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 72 வயதுடைய ஆணொருவர் குளவி கொட்டுக்காளாகி, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லிந்துளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துலை பெர்ஹாம் தேயிலைத் தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (31) காலை வேளையில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு பேருக்கு குளவி கொட்டு ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் மற்றையவர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.