ஜெர்மனி ரெயில் பயணிகள் மீதான தாக்குதல்-ஐ.எஸ். அமைப்பு

752 0

201607191940174341_Islamic-State-claims-responsibility-for-train-attack-in_SECVPFஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் ஓடும் மின்சார ரெயிலில் இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் நான்கு பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரெயில் நின்றதும் கீழே இறங்கி செல்ல முயன்றவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபன் ஓச்ஸென்பர்ட் நகரில் வாழ்ந்து வந்ததாகவும், அகதி விண்ணப்பம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

தற்போது இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ‘‘ஜெர்மனி ரெயிலில் பயணிகள் மீதான தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம்’’ என ஐ.எஸ. அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.