ஊடக துறையில் உண்மையை கண்டறிதலின் முக்கியத்துவம் பற்றிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்தை மெரிடியன் இன்டர்நேஷனல் சென்டர், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களின் திறனை மேம்படுத்துவதையும், தெற்காசியாவில் குடிமக்களால் உருவாக்கப்பட்ட ஊடகங்களை சிறந்த முறையில் நிலைநிறுத்து தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் நேபாளம், பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்து ஊடகவியளாலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் பங்குபற்றிய ஊடகவியலாளர்களை அத்தியாவசிய திறன்கள் மற்றும் அறிவைக் கொண்டு தவறான தகவல்களைக் கண்டறிந்து அவற்றைச் சமாளிப்பதற்கும் நெறிமுறை அறிக்கையிடல் நடைமுறைகளை நிலைநிறுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டுள்ளமை குறிக்கிடத்தக்கது.