எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை வகிக்க தடை விதிக்குமாறு கோரி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை தெரிவிக்குமாறு கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று (31) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான ஆட்சேபனைகளை எதிர்வரும் மே 22ல் தாக்கல் செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலமைப்பின் பிரகாரம் ஏனைய கட்சிகளில் அங்கம் வகிக்கும் நபர்கள் இந்தக் கட்சியில் பதவிகளை வகிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.