உளவு பார்த்த குற்றத்துக்காக அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இவான் கார்ஸ்கோவிச் என்ற அந்த பத்திரிகையாளர் யூரல் மலைப்பகுதியின் யெகாடரின்பர்க் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டதாக எஃப்எஸ்பி (The Federal Securiy Service) எனப்படும் ரஷ்ய உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்லனர். இவான் கெர்ஸ்கோவிச் சில ரகசியத் தகவல்களை இடைமறித்து சேகரிக்க முயன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்போர் காலத்திற்குப் பின்னர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் ரஷ்யாவால் உளவுக் குற்றத்திற்காக கைது செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்கா, ரஷ்யா இடையே உறவுச் சிக்கல் வலுத்தள்ள நிலையில் இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது.
இவான் கெர்ஸ்கோவிச், அமெரிக்க அரசின் உத்தரவின் பேரிலேயே ரஷ்யாவில் உளவு வேலை பார்த்ததாகவும் எஃப்எஸ்பி அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இருப்பினும் கெர்ஸ்கோவிச் என்றைக்கு கைது செய்யப்பட்டார் என்ற தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை. இந்தக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் இவான் கெர்ஸ்கோவிச் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்கக்கூடும்.
இவான் கெர்ஸ்கோவிச் உக்ரை ரஷ்யா போர் செய்தியை எழுதுவதற்காக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையால் அனுப்பப்பட்டிருக்கிறார். அவரிடம் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய பத்திரிகையாளர் அங்கீகார அடையாள அட்டையும் உள்ளது. இருப்பினும் அவரை ரஷ்யா உளவாளி எனக் கைது செய்துள்ளது.
இவான் எர்ஸ்கோவிச் கடைசியாக இந்த வாரத் தொடக்கத்தில் ஒரு செய்திக் கட்டுரையை தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளார்ம். அது மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷ்யப் பொருளாதாரம் எந்த வகையில் சரிந்துள்ளது என்பது பற்றியதாகும்.