யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக இன்று (31) மீட்கப்பட்டுள்ளார்.
கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றினை அமைத்து, அதில் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர் இன்று காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.