பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளும்

83 0

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை எதிர்க்கொள்ளும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கையை புறக்கணித்து நாட்டு மக்கள் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.

தனியார் மயப்படுத்தப்பட்ட அரச வளங்களை மீண்டும் அரசுடமையாக்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. தற்போது அனைத்து வாக்குறுதிகளும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச வளங்களை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை தொடர்ந்து நீடிக்கும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கை கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுபபினர்களுக்கும் இடையில் நல்லதொரு இணக்கப்பாடு கிடையாது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கும் முயற்சிகளை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளார்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் வெகுவிரைவில் பிளவுப்படும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் பாரிய பின்னடைவை வெகுவிரைவில் எதிர்கொள்ளும் என்றார்.