வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் கொலை – தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் விடுவிப்பு…

280 0
வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் Kim Jong-nam  இன் மரணம் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவரை மலேஷிய காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.
எனினும், மலேஷிய குடிவரவு சட்டத்தினை அவர் மீறியுள்ளதன் காரணமாக, வட கொரியாவிற்கு அவர் நாடு கடத்தப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட Ri Jong Chol என்ற வட கொரியாவை சேர்ந்தவருக்கு எதிராக போதிய சாட்சிகள் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடகொரிய தலைவர் Kim Jong-un இன் சகோதரர் Kim Jong-nam கடந்த மாதம் 13ஆம் திகதி மலேஷிய தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச வானூர்தி தளத்தில் மரணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.