பெண்களுக்கு எதிரான பாகுபாட்டினை அகற்றும் ஐக்கிய நாடுகளின் குழுவிற்கு முன்னால், இலங்கை பிரதிநிதி, தட்டிக்கழிக்கும் வகையில் பதிலளித்தாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் காண்காணிப்பகத்தின் இணைய தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பகுபாட்டினை அகற்றும் குழு ஏற்கனவே, இலங்கையில் உள்ள சிவில் அமைப்புக்கள் பலவற்றிற்கு, பெண்கள் தொடர்பான தமது பல்வேறு கவலைகளை வெளிப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், இலங்கை பிரதிநிதி பெண்கள் தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த விடயத்தினையும் வெளிப்படுத்தவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் தொடர்பான உரிமை, மாறுபட்ட திருமண சட்டங்கள், காணி மற்றும் வாழ்வாதாரம், பெண்கள் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலான சட்டம் உட்பட்ட பல விடயங்கள் குறித்து இலங்கை பிரதிநிதி அறிந்திருக்கவில்லை.
அதனை வெளிப்படுத்த விரும்பவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இது தவிர, தற்போதைய நிலையில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு, உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் குறித்த கேள்விகளுக்கும் உரிய பதில் வழங்கப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.