இராணுவத்தின் சிக்கலான படங்களின் ஆதாரங்களுடன் ஐ.நாவில் இலங்கையின் சட்டத்தரணி!

270 0

தமிழர்கள் பிரதேசமான வடக்கு கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள இடங்களில் முழுமையாக மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை.

அந்த வகையில் கேப்பாப்புலவு, முள்ளிக்குளம் ஆகிய இடங்களை படையினர் தமது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அபிவிருத்தி கிராமங்கள் எனும் பெயரில் நிலைகொண்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதிகளில் இராணுவ புலனாய்வாலர்களின் பிரசன்னம் அதிகமாக இருப்பதாக சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்குமான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் சுபாஜினி கிஷோ என்டன் தெரிவித்துள்ளார்.ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது. இந்த கூட்ட தொடர்பில் பொது அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க பிரேரணை ஒன்று கொண்டுவந்திருந்தது.இந்த தீர்மானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தமிழர் தாயக பகுதிகளில் இலங்கை அரசின் நிலைப்பாடு என்பன தொடர்பில் வழங்கிய விஷேட செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.