ஒவ்வொரு நாளும் நான் பாடசாலைக்கு செல்லும் நம்பிக்கையுடன் கண்முழிக்கின்றேன் தலிபான்கள்தாங்கள் பாடசாலைகளை திறப்பார்கள் என மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றனர் ஆனால் இரண்டு வருடங்களாகிவிட்டன நான் அவர்களை நம்பவில்லை இது எனது மனதை வேதனைப்படுத்துகின்றது என்கின்றார் 17 வயது ஹபீபா.
அவர் தனது கண்ணீரை கட்டுப்படுத்த கடும் முயற்சி செய்கின்றார்.
ஆப்கானில் தலிபான்களால் பாடசாலைக்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவிகளில் ஹபீபாவும் அவரது நண்பிகளான மஹ்டாப் தமனா ஆகியோர் உள்ளனர்.
உலகில் ஆப்கானிஸ்தான் மாத்திரமே இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அவர்களது கற்றல்வாழ்க்கை முடிவிற்கு கொண்டுவரப்பட்டு ஒன்றரை வருடங்களாகின்றது – அவரது துயரம் இன்னமும் ஆறாமல்உள்ளது.
தங்களிற்கு நடந்தது குறித்த – கல்விக்கான உரிமை மறுக்கப்பட்டது குறித்த சர்வதேச சமூகத்தின் சீற்றம் குறையத்தொடங்கியுள்ளது மறையத்தொடங்கியுள்ளது என கருதுவதாக மாணவிகள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் ஒவ்வொரு நாளும் வேதனையுடன் வாழ்கின்ற போதிலும் – இந்த வாரம் இன்னுமொரு பாடசாலை தவணை ஆரம்பித்துள்ளமை அவர்களிற்கு கவலையை அளித்துள்ளது.
ஆண்மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதையும் அவர்கள் தங்களிற்கு பிடித்தமானவற்றை செய்வதையும் பார்க்கின்ற போது அது உண்மையாகவே என்னை காயப்படுத்துகின்றது நான் மோசமாக உணர்கின்றேன் என்கின்றார் தமனா.
எனது சகோதரர் பாடசாலைக்கு செல்லும்போது நான் மனம்நொருங்கிப்போகின்றேன் என்கின்றார் அவர்.
இதனை தெரிவிக்கும்போது அவரது குரல் உடைகின்றது கண்களில் நீர் வடிகின்றது ஆனால் அவர் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்கின்றார்.
முன்னர் நான் உன்னை விட்டு விட்டு பாடசாலைக்கு செல்லமாட்டேன் என எனது சகோதாரர் தெரிவிப்பார் நான் அவரை கட்டியணைத்து போய்வா நான் விரைவில் உன்னுடன் இணைவேன் என தெரிவிப்பேன் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
நீங்கள் கவலைப்படக்கூடாது உங்களிற்கு ஆண்பிள்ளைகள் உள்ளனர் என மக்கள் எனது பெற்றோருக்கு தெரிவிக்கின்றனர் எங்களிற்கும் ஆண்பிள்ளைகளின் உரிமை இருக்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என்கின்றார் அவர்.
மாணவிகள் பாடசாலைகளிற்கு மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் தலிபான்களின் கெடுபிடிகளால் குறைவடைகின்றது.
ஆரம்பத்தில் சிறிதளவு சுதந்திரம் காணப்பட்டது அது தற்போது குறைவடைகின்றது என்கின்றார் ஹபிபா.
2021 இல் முதலில் பாடசாலைகள் மீதான கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது.அவ்வேளை 72 கிலோமீற்றர் தொலைவிற்கு அப்பால் செல்லும் பெண்கள் ஆண் துணையுடன் செல்லவேண்டும் என தலிபான் அறிவித்தது.
மார்ச் 2022 இல் மாணவிகளிற்கான பாடசாலைகள் ஆரம்பமாகும் என தலிபான் அறிவித்தது.எனினும் ஒரிரு மணித்தியாலங்களில் அவை மூடப்பட்டன.
அதற்கு இரண்டு மாதங்களிற்கு பின்னர் பெண்கள்-தங்கள் தலைமுதல் கால்வரை மூடி ஆடை அணியவேண்டும் என்ற அறிவிப்பு தலிபானிடமிருந்து வெளியானது.
நவம்பரில் பெண்கள் பூங்காக்கள் நீச்சல் தடாகங்கள் உடற்பயிற்சி கூடங்களிற்கு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் பல்கலைகழகங்களில் மாணவிகள் பொருளாதாரம் பொறியியல் ஊடக கல்வி போன்றவற்றை பயில்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் பெண்களிற்கு பல்கலைகழகங்களில் அனுமதி மறுக்கப்பட்ட பெரும் அடி விழுந்தது.
இதன் பின்னர் பெண்கள் உள்நாட்டு சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகளில் பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த கட்டுப்பாடுகள் அதிகரித்தால் உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை என தெரிவித்தார் மஹ்டாப்