வாக்குரிமையை விட மக்கள் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும்

116 0

பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவற்றிலிருந்து மீள்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்ததன் பின்னர் , எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியும்.

வாக்குரிமையை விட மக்கள் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

வாக்குரிமையை விட மக்கள் வாழ்வதற்கான உரிமைக்கே முன்னுரிமையளிக்க வேண்டும். நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அவற்றிலிருந்து மீள்வதற்கான சூழலை நாட்டில் தோற்வித்தன் பின்னர் , எந்தவொரு தேர்தலையும் நடத்த முடியும்.

எரிபொருள் , மின் கட்டணம் , வரி உள்ளிட்டவை குறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் போலியான மாயாஜாலங்களைக் காண்பிக்காது மக்களுக்கு நடைமுறை சாத்தியமாக சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கமைய பொருளாதாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் படிப்படியாக அபிவிருத்தியடைந்து வருகின்றன. எனினும் அவற்றுக்கு நிகராக சுகாதாரக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.

மருந்து இன்மையால் நாளாந்தம் உயிரிழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. இந்நிலைமையை மீளக் கட்டியெழுப்புவதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் நான் அவதானம் செலுத்துவேன்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள கடன் உதவியில் குறித்த தொகை முக்கியத்துவமுடையதல்ல. அதனால் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ள உத்தரவாதமே முக்கியத்துவமுடையதாகும்.

இந்த ஒத்துழைப்பினால் வங்குரோத்து நிலைமையிலிருந்து நாடு மீண்டுள்ளது. ஜனாதிபதியினதும் , எமது நிலைப்பாடுகளும் ஒருமித்தவையாகும். எனினும் நாம் இருவேறு திசைகளிலுள்ளோம் என்றார்.