ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ வீரர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

250 0

ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் ஐந்து பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இதேவேளை, சந்தேக நபர்களை இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட இருந்த நிலையில் அதுவும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.