பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை(காணொளி)

267 0

பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து, 5 லட்சம் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளதாக விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இழப்பீட்டுத் தொகையின் முதலாவது பகுதியை இந்த மாதத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த மாத முதற்பகுதியிலோ வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இழப்பீட்டைப் பெறத் தகுதியான விவசாயிகள் பற்றி பிரதேச மட்டத்தில் தகவல்கள் திரட்டப்படவுள்ளதாகவும், இதற்காக விவசாய கிராமிய, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் பயிர் நிலங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.