நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் (காணொளி)

271 0

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை, நாளை வரை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை கிழக்கு, வடக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டகங்களிலும் எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் நண்பகள் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் எனவும், சில பகுதிகளில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வரையான நாட்டின் கடற்கரை பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படும்.

காற்றின் வேகம் 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்கில் காணப்படும் எனவும், கடற்கரை பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பலமான காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.