பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேயின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் முன்வைத்த மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் 3ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (27) விடுமுறையில் இருப்பதால் அது தொடர்பான மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி வசந்த முதலிகேவும் நீதிமன்றில் முன்னிலையானார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகேவை, போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவித்து கொழும்பு பிரதான நீதவான் விடுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.