இலங்கையில் நடைபெற்று வருகின்ற மத வெறிச்செயலின் உச்ச செயற்பாடே வெடுக்குநாறிமலைச் சிவன் ஆலய அழிப்பு எனவும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெடுக்குநாறிமலை ஆலயத்தை உடனடியாக மீளுருவாக்கி வழிபாட்டுக்கு திறந்து விடுவதோடு இத்தகைய சம்பவம் தொடராதிருக்க பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார்.