சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் எந்த தடைகளும் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் அயர்லாந்து பாணியிலான நடைமுறைப்படுத்தும் பிரிவொன்றை ஏற்படுத்துவது குறித்து ஆராய்ந்துகின்றது.
தடைகள் காரணமாக சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடை நிறுத்தப்படுவதை தவிர்ப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
இதனை தவிர்ப்பதற்காக விசேட அதிகாரங்களுடன் விசேட பிரிவொன்றை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்குகள் மற்றும் கட்டமைப்பு வரையறைகளை அடைவதற்காக அரசாங்கம் இந்த விசேட பிரிவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் அயர்லாந்திற்கான சர்வதேச நாணயநிதியத்தின் அதிகாரி அயர்லாந்து கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டவேளை உருவாக்கப்பட்ட நடைமுறைப்படுத்தும் பிரிவு குறித்து மத்திய வங்கி ஆளுநர் உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எடுத்துரைத்துள்ளார்.
நாட்டின் மீதான நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பொருளாதார மீட்சியை சீர்குலைக்கும் சறுக்கல்களை தவிர்ப்பதற்காக அரசாங்கம்இவ்வாறான பிரிவை ஏற்படுத்துவது குறித்து ஆராய்ந்துவருகின்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
நாங்கள் பாதையை விட்டு விலகிவிட்டோம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதே இறுதியாக எங்களிற்கு நடக்ககூடிய பாதகமான விடயம் என தெரிவித்துள்ள அவர்அவ்வாறான விடயம் இடம்பெற்றால் நாட்டிற்கு நிதி வருவது பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடைநிறுத்தப்பட்டால் சமீபத்தில் அதன் நிதி உதவி கிடைத்ததன் காரணமாக உருவாகிவரும் புதிய நம்பிக்கையும் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ள இந்திரஜித் குமாரசுவாமி சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் இடைநிறுத்தப்பட்டால் அனைத்து பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இவ்வாறான நடைமுறைப்படுத்தல் பிரிவு குறித்து ஜனாதிபதி மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார் என இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கி ஏற்பாடு செய்த கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இதனை உருவாக்கவேண்டும்,அது செயற்படுவதாக காணப்படவேண்டும் எனவும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எந்த பிரிவையும் தொடர்புகொண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அதிகாரம் உள்ள ஒருவர் நியமிக்கப்படவேண்டும்,நடைமுறைப்படுத்தல் பிரிவிற்கு அதிகாரம் அவசியம் ஜனாதிபதி அதன் பின்னால் இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிய காலத்திற்குள் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அயர்லாந்தின் விசேட பிரிவு வெற்றிபெற்றது இதன் காரணமாக அந்த நாட்டினால் பொருளாதார நெருக்கடியிலிருந்து குறுகிய காலத்தில் மீள முடிந்தது எனவும் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.