யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் பலி

274 0
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் முதலாவதாக டெங்கு காச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த 34 வயதான நந்தகுமார் லக்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவாரவர்.
குறித்த உயிரிழந்த பெண்ணானவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார். இவ்வாறான நிலையில் கடந்த 28ஆம் திகதி முதல் இவர் கடுமையான காச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து இவர் தனியார் வைத்தியசாலையொன்றில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இருந்த போதிலும் காச்சலின் தன்மை தீவிரமடைந்ததையடுத்து இவர் நேற்றைய தினம் காலை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
இருந்த போதிலும் குறித்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துவிட்டதாக யாழ் போதனா வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த மரணம் தொடர்பான மரண விசாரனையை யாழ்.போதனா வைத்தியசாலின் திடீர் மரண விசாரனை அதிகாரியான நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் இந்த வருடம் கடந்த வருடத்தை விடவும் அதிகமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்ததாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இதன்படி கடந்த இரண்டு மாதங்களில் 646 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர்கள் பூரண குணமடைந்து சென்றிருந்தாகவும் யாழ்போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.