பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்(காணொளி)

279 0

கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்;ள அதிகளவானோரின் வாழ்வாதார தொழிலாக கால்நடை வளர்ப்பு காணப்படுவதுடன், தற்போது கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கு உரிய மேச்சல் தரவைகள் இன்மை மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கான சிகிச்சை என்பவற்றில் கால்நடை வளர்ப்போர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களின் மாதாந்த வருமானத்தையும் இழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சிப்;பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கனகாம்பிக்கைக்குளம், பாரதிபுரம், மலையாளபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களான பொன்னகர், இந்துபுரம், செல்வபுரம், திருமுறிகண்டி ஆகிய கிராமங்களில் கால்நடை வளர்ப்போருக்கான அமைப்புக்கள் இணைந்து குறித்த கலந்துரையாடலை நடாத்தியது.

கால்நடைகளுக்கு ஏற்படும் இடர்களை தெரியப்படுத்தும்; கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் கரைச்சி பிரதேச கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர், ஒட்டுசுட்டான் பிரதேச கால்நடை உத்தியோகத்தர், குறித்த கிராமங்களை சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.