கிளிநொச்சி முகமாலை கிளாலி மற்றும் வேம்பெடுகேனி ஆகிய வெடி பொருள் ஆபத்தான பிரதேசங்களில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி வெடிகளை அகற்றுவதில் நெருக்கடி நிலை கானப்படுவதாக பூனகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை கிளாலி மற்றும் வேம்பெடுகேணி ஆகிய பகுதிகள் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் கானப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் வெடி பொருட்கள் அகற்றும் பணிகள் சர்வதேச தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் குறித்த பகுதிகளுக்குள் சென்ற பலர் உயிரிழந்ததுடன் உடல் அபயவங்களையும் இழந்துள்ளனர் அத்துடன் பெருமளவான கால்நடைகளும் உயிரிழந்துள்ளன.
இவ்வாறான பிரதேசங்களில் தற்போது தொடர்சியாக சட்ட விரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பகுதிகளிலுள்ள வீதிகள் சேதமடைந்து வருவதுடன் கடல் நீர் உட்புகும் அபாயம் கானப்படுவதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்
இந்த விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்;ணேந்திரன் குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோதமான மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மிதிவடிகள் மற்றும் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தும் மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த மணல் வெளியிடங்களுக்கு செல்லப்படுவதாகவும் மிதிவடிகள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளிலே இருக்கின்ற அடையாளக் குறியீடுகளை அகற்றிவிட்டு அந்த இடங்களிலே மணல் அகழ்வுகளை மேற்கொள்வதாகவும் கண்ணிவெடிகளை அகற்றும் தொண்டு நிறுவனங்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.