எமது நியாயமான இந்த போராட்டத்தை உலகறிய செய்து எமது போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே-பிலவுக்குடியிருப்புமக்கள்

371 0

எமது நியாயமான போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்கள்தான் .! அவர்களால் தான் நாம் இன்று எம் சொந்த மண்ணில் நிற்கின்றோம் ! பிலவுக்குடியிருப்புமக்கள்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கப்படவேண்டுமென கோரி கடந்த ஒரு மாதகாலமாக வீதியில் போராடி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இந்த மக்களுக்கு சொந்தமானான அனைத்து நிலங்களும் விடுக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் நேற்றையதினம் இந்த கிராமத்து மக்கள் அடை மழைக்கு மத்தியிலும் தமது காணிகளை துப்பரவாக்கும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு தமது காணிகளில் சிறுகூடாரங்களை தரப்பாள்களை கொண்டு அமைத்து வசித்துவருவதையும் அவதானிக்கமுடிந்தது. அடைமழையையும் பொருட்படுத்தாது சொந்த நிலங்களை மீட்ட வெற்றிக்களிப்பில் இருக்கும் இந்த போராட்டத்தை தலைமைதாங்கி நடாத்திய கௌசல்யா என்ற பெண் தெரிவித்ததாவது,

நாம் ஜனவரி  31ஆம் திகதி எமது காணிகள் விடுவிக்கப்பட போகின்றது என்ற ஆவலில் நாம் எமது காணிகளை நோக்கி ஓடிவந்த பொழுது காணிகள் விடுவிக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்தவர்களாய் வீதியின் ஓரத்தில் இராணுவமுகாமுக்கு முன்பாக எமது காணிகளில் கால் பத்தித்துதான் இந்த போராட்டத்திலிருந்து செல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆவலில் எமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தோம்.

நாம் அவ்வாறு போராட்டத்தை ஆரம்பிக்கும் போது யாரையும் நம்பியோ அல்லது எந்தவித அரசியல்வாதிகளின் பின்புலம் கிடைக்கும் என்ற எண்ணத்திலோ போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனால் எமது போராட்டத்தில் இறுதிவரை உறுதியாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலே நாம் அனைவரும் எப்போதும் இருந்தோம்

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் போற்றுகின்றோம்!

நாம்  ஆரம்பித்த இந்த போராட்டத்துக்கு ஆரம்பித்த நாளிலிருந்து எமது நியாயமான இந்த போராட்டத்தை உலகறிய செய்து எமது போராட்டத்தை வீச்சாக்கியது ஊடகங்களும் ஊடகவியலாளர்களுமே.எமது போராட்டத்தில்; தாங்களும் ஒருவராக இணைந்து நாம் உண்ணும் உணவுகளை உண்டு எம்மோடு வீதியில் படுத்துறங்கி ஒவ்வொரு நாளும் செய்திகளை தயாரித்து தமது ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்த ஒவ்வொரு ஊடகவியலாளனுக்கும் நாம் தலை வணங்குகின்றோம். அவர்களின் ஊடக நிறுவனங்களை போற்றுகின்றோம். அவர்கள்தான் எமது வெற்றியின் முதல் காரணகர்த்தாக்கள்.

இனமதமொழி பேதங்களையெல்லாம் தண்டி எமக்கு ஆதரவளித்த அனைவரும் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.எமது போராடடம் ஆரம்பித்த நாளிலிருந்து எமது நியாயமான கோரிக்கைகளை புரிந்துகொண்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இனமதமொழி பாகு பாடுகளையெல்லாம் தாண்டி எமக்காக ஆதரவுக்கரமும்  உதவிக்கரம் நீட்டிய  சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் மற்றும் அனைத்து சிவில் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தேசங்களிலெல்லாம் எமக்காக போராட்டங்களை நடாத்திய மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்புவோம் என்ற அசையாத நம்பிக்கை பிறந்திருக்கின்றது.

நாம் போருக்கு முன்னர் எமது சொந்த நிலங்களில் எவ்வாறு செல்வச் செழிப்போடு மகிழ்வோடு வாழ்ந்தோமோ அதே நிலையை மீண்டும் அடைவோம் என்ற நம்பிக்கை என்றும் இருக்கின்றது. அந்த நம்பிக்கை என்னும் ஆயுதத்தைக்கொண்டு எமது எதிர்காலத்தை வளப்படுத்தி எமது சொந்த மண்ணில் தலை நிமிர்ந்து வாழ்வோமென பிலக்குடியிருப்பு மக்கள் அசையாத நம்பிக்கையை வெளியிட்டனர்