வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

281 0

வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

நாளையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளதாக இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.