வவுனியா பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஒமந்தை வனவளத்தினைக்களத்திற்கு நேற்றுக் காலை கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து பெரியமடு விசேட அதிரடிப்டையினருடன் இணைந்து ஒமந்தை வனவள தினைக்களத்தினர் துரித நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது பாலமோட்டை நவ்வி பிரதேசத்தில் அரிந்த நிலையில் ஜீப் வண்டியில் ஏற்றப்பட்டு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 31 முதிரை மரக்குற்றிகளும் ஜீ,ப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இக்கடத்தலுடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டு, வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்ட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.