வவுனியாவில் சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்

105 0

வுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துவரப்பட்ட சிறைச்சாலை கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றமை தொடர்பான காணொளியொன்று நேற்று (25) வெளியாகியுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் அழைத்துவரப்பட்ட கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பித்து, வவுனியா வைத்தியசாலையை அண்மித்துள்ள வயல்வெளியில் ஓடியபோது அக்கைதியை சிறை அதிகாரிகள் பின்தொடர்ந்து ஓடிச்சென்று பிடித்து, மீண்டும் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர் ஒருவர் கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதில் சிறை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று கைது செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன.