முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவித்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் இதனை செய்திப்பிரிவிடம் கூறியுள்ளார்.
கேப்பாபுலவில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த புலவுக்குடியிருப்பு காணி கடந்த தினம் மக்களின் 29 நாட்கள் நீடித்த போராட்டத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டது.
எனினும் தற்போது கேப்பாபுலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற 200 ஏக்கருக்கும் அதிக விஷ்தீரனம் கொண்ட காணியையும் விடுவிக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் அங்குள்ள பொதுமக்களுக்கு உரித்துடைய காணிகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், விரைவில் அதுகுறித்த அறிக்கை ஒன்று இராணுவத்துக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் வழங்கப்படும் என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.