ஜனாதிபதியின் நோக்கத்திற்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடபபட்டுள்ளது. நிறைவேற்றுத்துறையின் நோக்கத்துக்கு அமைய தேர்தலை பிற்போட இடமளித்தால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும். சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்த வாரம் முதல் மாறுபட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் கூட்டணி காரியாலயத்தில் சனிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் வரை எந்த தேர்தலையும் நடத்த போவதில்லை என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவை மதிக்காமல் நிறைவேற்றுத்துறை செயற்படுகிறது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீன ஆணைக்குழுவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை நிறைவேற்றுத்துறை கேள்விக்குள்ளாக்கியுள்ளது,தேர்தலை நடத்த ஆணைக்குழு முறையாக செயற்பட்டாலும் அரசியல் அழுத்தம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாரிய தடையாக காணப்படுகிறது.
ஜனாதிபதியின் நோக்கத்திற்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடபபட்டுள்ளது. நிறைவேற்றுத்துறையில் நோக்கத்துக்கு அமைய தேர்தலை பிற்போட இடமளித்தால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழியும். சகல எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்த வாரம் முதல் மாறுபட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவோம்.
எரிபொருள் ,எரிவாயு, மின்சாரம், இல்லாமல் இருந்த நாட்டை பொறுப்பேற்றேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை ஆளும் தரப்பினர் கரகோஷத்துடன் வரவேற்றார்கள். முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷஇபசில் ராஜபக்ஷ ஆகியோரின் நிதி முகாமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நாடு தீபற்றியெரிந்ததுஇஎன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறைமுகமாக குறிப்பிடுகிறார் பொதுஜன பெரமுனவினர் அதனை கைத்தட்டி வரவேற்றிகார்கள். பொதுஜன பெரமுனவினர் வெட்கப்பட வேண்டும்.
பொருளாதார பாதிப்புக்கு இதுவரையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் ஆனால் நாடு வங்குரோத்து நிலை அடைவதற்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்தி பணிகளுக்கு மனம்போன போக்கில் நிதி ஒதுக்கியது.அபிவிருத்தி என்ற பெயரில் அரச நிதி மோசடி செய்யப்பட்டது.இறுதியில் அபிவிருத்தியும் இல்லை நீதியும் இல்லை பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்தது.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் குறுகிய காலத்திற்குள் 10 பில்லியன் டொலர் சர்வதேச பிணைமுறிகள் கடனை பெற்றுக்கொண்டது.இலங்கை அரசமுறை கடன் பொறிக்குள் சிக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதான பங்காளியாக உள்ளார்.இதனை ஆளும் தரப்பினர் அறியாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என புகழ் பாடிக் கொள்கிறார்கள் என்றார்.