போர்க்குற்ற விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளை இணைக்கும் வகையில் இலங்கையில் சட்டத்திருத்தம் எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜெனீவாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விசாரணைகளுக்கான பொறிமுறையானது, சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடனோ, பங்களிப்பு இல்லாமலோ முன்னெடுக்கப்படும் என்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுசீரமைப்பு விடயங்களில் சர்வதேச நீதிபதிகள் குறித்த விடயமே சிக்கலுக்குரியதாக இருக்கிறது.
இந்தவிடயத்தில் சில கடும்போக்குவாதிகள் எதிராக இருக்கின்றனர்.
எவ்வாறாயினும் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையானது நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் மங்கள சமரவீர உறுதியாக கூறியுள்ளார்.