பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்

270 0
2015ம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அமுலாக்க அரசாங்கம் உரிய கால அட்டவணை ஒன்றை முன்வைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இந்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு உரிய நேர அட்டவணை ஒன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.