லாவோஸின் பலவந்த நிதி மோசடி முகாமொன்றில் சிக்குண்டிருந்த 24 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
லாவோஸின் பலவந்த நிதி மோசடியில் சிக்கியிருந்த இலங்கையர்கள் மோசடிகளில் ஈடுபடுமாறு துன்புறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் – இவர்கள் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நான்கு மாதங்களிற்கு முன்னர் வர்த்தக விசாவில் தகவல்தொழில்நுட்ப துறை வேலைகளிற்காக லாவோஸ் சென்ற இலங்கையர்களே இந்த அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்கள் லாவோஸ் சென்றதும் இவர்களின் கடவுச்சீட்டுகள் தொலைபேசிகள் ஆவணங்கள் அனைத்தையும் தொழில்வழங்குநர் பறித்துவைத்துக்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னர் அவர் இலங்கையர்களை இணையமோசடிகளில் ஈடுபடுமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்.
ஆனால் இலங்கையர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் தொழி;ல்வழங்குநர் இலங்கையர்களை லாவோசில் உள்ள பகுதியில் அடைத்துவைத்துள்ளார்.
எனினும் மிகவும் ஆபத்தான சவாலான சூழ்நிலைகளிற்கு மத்தியிலும் இலங்கையர்கள் இலங்கை அதிகாரிகளிற்கு அறிவித்த பின்னர் அங்கிருந்து தப்பி தாய்லாந்து சென்றுள்ளனர்.
பின்னர் இவர்கள் 24 ம் திகதி இலங்கை வந்து சேர்ந்துள்ளனர்.