இலங்கையின் தலைநகரான கொழும்பில் அதிகளவில் முஸ்லிம் மக்களும் இரண்டாவதாக தமிழ் மக்களும் 3 ஆவதாகவே சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்பட எத்தனிக்கும் போது வடக்கு முதலவரின் செயற்பாடு இனவாதமாக இருப்பதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் பல நல்ல விடையங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சிலர் வடக்கு கிழக்கில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகின்றார்கள்.
ஆனால் அந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.இவ்வாறு இருக்க இன்று வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் அனைத்தும் இனவாத செயற்பாடுகளாகவே உள்ளன.
இருப்பினும் தாம் அவ்வாறு செயற்படவில்லை, கொழும்பில் அதிகளவில் முஸ்லிம் மக்களும் இரண்டாவதாக தமிழ் மக்களும் 3ஆவதாகவே சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள் என்ற உண்மையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.இவ்வாறு தாங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம். இதனையே வடக்கு முதல்வரும் புரிந்துகொள்ள வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.