வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு நாளை தீர்வு..! மாவை எம்.பி

239 0

யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில், குறித்த போராட்டத்திற்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.

இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகளை சந்தித்த அவர், யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதியுடன் இந்த விடையம் தொடர்பில் கலந்துரையாட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவுசெய்துள்ளனர். எனினும் அவர்களுக்கு உரிய நியமனங்கள் வழங்கப்படவில்லை.இந்த நிலையில் வேலையவாய்ப்பு வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பட்டதாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.