சித்தார்த்தனை அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்க வேண்டும்

94 0

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ள சித்தார்த்தன் எம்.பியை இதுவரை பெயரிடாமல் இருக்கிறது. இது அந்த தொகுதி மக்களுக்கு செய்யும் பிழையான முன்மாதிரியாகும். அதனால் உடனடியாக அவரின் பெயரை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்திருக்கும் சித்தார்த்தன் எம்.பி்யை பெயரிடுமாறு நான் பல தடவைகள் அரசியலமைப்பு பேரவையில் தெரிவித்திருக்கிறேன். அது இதுவரை செயற்படவில்லை. அவரின் பெயரை அரசியலமைப்பு பேரவைக்கு உள்வாங்காமல் இருப்பது வடகிழக்கு அதிகார பிரதேசத்துக்கும் ஏனைய மக்கள் குழுவுக்கும் மேற்கெள்ளப்படும் மோசமான முன்மாதிரியாகும்.

அதனால் அரசியலமைப்பு பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10ஆகும் தற்போது 9பேரே இருக்கின்றனர். அதனால் அந்த இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ளதன் பிரகாரம் சித்தார்த்தன் எம்,பியை பெயரிட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.