உண்மை கண்டறியும் ஆணைக்குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தேசிய பிரச்சினை தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க பெறுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்ட வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டமை இலங்கை நீதித்துறையில் உள்ள நம்பக தன்மையை வெளிப்படுத்துகின்றது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடியதாக இருக்கிறது.
இதற்காக தென்னாபிரிக்காவின் அனுகுமுறை ஆராயப்படுகின்றது.
அதிலுள்ள சாதக மற்றும் பாதக விடயங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.
இலங்கையில் 30 வருட கால யுத்தம் நிறைவடைந்துள்ளது.
அதன் பாதிப்புக்களை சீர் செய்ய மேலும் 30 வருட காலத்தை எடுக்க முடியாது.
உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களது பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.