பிரான்சில் ஓய்வூதியத் திட்டத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு எதிராக பிரான்சில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து வண்ணம் உள்ளன.
ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பிரான்சின் தென்மேற்கு நரமான போர்தோ Bordeaux நகரில் அமைந்துள்ள நகர மண்டபத்தை நேற்று வியாழக்கிழமை இரவு தீக்கிரையாக்கினர். நகர மண்டபத்தின் கதவு தீப்பிடித்தது.
தீ விபத்துக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தீயணைப்பு வீரர்களால் விரைவாக தீ அணைக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பிரான்ஸ் முழுவதும் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
பாரிசில் மட்டும் 119,000 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டதாக பிரான்சின் உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பாரிசில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகைக்குண்டு காவல்துறையினரால் வீசப்பட்டது. 80 போராட்டக்காரர்கள் கைது செய்யபட்டனர்.
முகமூடி அணிந்த போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையிருக்கும் மோதல்கள் நடந்தன. அவர்கள் கடைகளின் சாரளரங்களை அடித்து நொருக்கினர். வீதிகளில் உள்ள தளபாடங்களை அடித்து உடைத்தனர். மெக்டொனால்டு உணவகத்தை தாக்கினர்.
ஓய்வூதிய வயதை 64 ஆக இரண்டு ஆண்டுகள் உயர்த்தும் சட்டத்தால் ஆர்ப்பாட்டங்கள் தூண்டப்பட்டன.