விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்க முடியாது : மஹிந்த அமரவீர!

216 0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தேசிய சுதந்திர முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஓர் கூட்டணி கட்சியல்ல. கூட்டமைப்புடன் எவ்வித ஒப்பந்தங்களையும் தேசிய சுதந்திர முன்னணி கைச்சாத்திடவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்ச உள்ளிட்ட அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மட்டுமேயாகும்.ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித் தனியாக கோரினால் அது குறித்து கவனம் செலுத்த முடியும்.

தேசிய சுதந்திர முன்னணியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதாக வெளியிடப்பட்டுள்ள கருத்தையும் நிராகரிக்கின்றேன்.

குறித்த உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாவர்.எந்தவொரு நபரையும் பலவந்தமான அடிப்படையில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கூட்டமைப்பிலிருந்து விலக வேண்டுமென எழுத்து மூலம் கோரும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும்விமல் வீரவன்சவின் கடிதத்திற்கு பதில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.