பொலிஸ் காவலில் சிகிச்சைப்பெற்றுவந்த கைதி தப்பியோட்டம்

231 0

மன்னார் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப்பெற்றுவந்த கைதியொருவர் தப்பியோடியுள்ளார்.

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய கைதியொருவர் நோய் நிலைமை காரணமாக பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப்பெற்றுவந்தார்.இவர் நேற்று (02) பொலிஸாருக்கு தெரியாமல் தப்பியோடியுள்ளார்.இதன் காரணமாக மூன்று பொலிஸ் அதிகாரிகள் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தப்பிச்சென்ற கைதியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.