தாய்லாந்து பாராளுமன்றத்தை அந்நாட்டின் பிரதமர் பிரயுத் சான் ஓ-சா இன்று கலைத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத் சான் ஓ-சா, 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இராணுவப் புரட்சியின் பின்னர் பிரதமரானார்.
முன்னாள் பிரதமரான கோடீஸ்வரர் தக்சின் ஷினவாத்ராவின் மகளான யிங் லக் ஷினவாத்ரா பிரதமராக பதவி வகித்தபோது மேற்படி இராணுவப் புரட்சி நடத்தப்பட்டமை குறிப்பிடத்கத்கது.
பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு பின்னர் அறிவிக்கும்.
மே 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் தேர்தல் நடப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.