யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவமானது இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமாகும். இதனை திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் சார்பாக ஏற்பட்ட குழப்பம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென தனியான கலாச்சார பாரம்பரியம் ஒன்றுண்டு. அதனை நாங்கள் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்கவோ, தணிக்கைசெய்யவோ முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும், பிற இன, மத மாணவர்களுக்கான மதிப்பினை நாங்கள் நிச்சயமாக வழங்குவோம். எமது நிர்வாகவும் அதனை வழங்கிக்கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.