தாய்வான் தொடர்பில் யுத்தம் வெடித்தால் அமெரிக்காவின் பக்கம் செல்லுமா அவுஸ்திரேலியா?

150 0

தாய்வான் தொடர்பில் யுத்தம் வெடித்தால் அவுஸ்திரேலியாவிற்கு அமெரிக்காவின் பக்கம் இணையும் எண்ணம் எதுவும் இல்லை என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

அக்கஸ் உடன்படிக்கை தொடர்பான பேச்சுக்களின் போது தாய்வான் தொடர்பிலான எதிர்கால யுத்தத்தின் போது அமெரிக்காவுடன் இணைந்துகொள்வது தொடர்பில் அவுஸ்திரேலியா எந்த உத்தரவாதத்தையும் வழங்கவில்லை  என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

சீனாவின் துரித இராணுவஉருவாக்கம் நாங்கள் வாழும் மூலோபாய பகுதியை தீர்மானிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்சீனா கடலில் வர்த்தகம் நடமாடும் மற்றும் விமானப்போக்குவரத்து சுதந்திரம் குறித்த அவுஸதிரேலியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிகள் உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய்வான் தொடர்பிலான எதிர்கால யுத்தம் குறித்து நான் எதிர்வுகூறப்போவதில்லை எனவும் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.